எதிர்காலத்தைப் பற்றி பேசுவதற்கு நாம் பெரியவர்களாகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
2025 நவம்பர் மாதத்தில் தித்வா சூறாவளி இலங்கை முழுவதும் கடுமையான மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை ஏற்படுத்தியது. வீடுகள் சேதமடைந்தன. பல குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. பாடசாலைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள்கூட பாதிக்கப்பட்டன.
2026 ஆகஸ்ட் மாதத்தில், இமயமலைப் பிராந்தியத்தில் பனிப்பாறை ஒன்றைச் சுற்றியுள்ள பகுதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக, நேபாளத்தின் பல பகுதிகளிலும் நீர், சேறு, கற்கள் மற்றும் பனிக்கட்டிகள் பெருக்கெடுத்து ஓடின. கிராமங்கள் அழிவடைந்தன. ஆயிரக்கணக்கான குழந்தைகளும் பெரியவர்களும் இந்தப் பேரழிவினால் பாதிக்கப்பட்டனர்.
ஒரு சூறாவளியோ அல்லது வெள்ளமோ ஏற்பட்டதற்கு காலநிலை மாற்றமே ஒரே காரணம் என்று எளிமையாகக் கூற முடியாது. பாதுகாப்பற்ற கட்டுமானங்கள், காடழிப்பு, அடைக்கப்பட்ட வடிகால்கள், முறையற்ற அபிவிருத்தி மற்றும் பலவீனமான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் போன்ற காரணங்களாலும் பேரழிவுகள் மேலும் தீவிரமடையக்கூடும்.
எனினும், பூமி வெப்பமடைந்து வருவதால் அதிக வெப்பநிலை, கடுமையான மழைப்பொழிவு மற்றும் மலைப்பகுதிகள் மற்றும் பனிப்பாறைப் பகுதிகளில் ஏற்படும் உறுதியற்ற தன்மை போன்ற அபாயங்கள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இவை வெறுமனே புறக்கணித்துவிடக்கூடிய அசாதாரண வானிலை நிகழ்வுகள் மட்டுமல்ல. இவை அதிகரித்து வரும் காலநிலை அவசரநிலைக்கான எச்சரிக்கை அறிகுறிகளாகும்.
உங்கள் பகுதியிலும் இதுபோன்ற மாற்றங்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?
சில நாட்கள் வழக்கத்தைவிட அதிக வெப்பமாக இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். உங்கள் பகுதியில் வெள்ளம், வறட்சி, நீர்ப்பற்றாக்குறை, மண்சரிவு அல்லது பயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கலாம். வடிகால்களை அடைத்துக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையோ, சாலையோரங்களில் எரிக்கப்படும் குப்பைகளையோ அல்லது மாசடைந்த குளம் அல்லது ஏரியையோ நீங்கள் பார்த்திருக்கலாம். யானைகளும் மனிதர்களும் உயிரிழக்கும் மனித–யானை மோதல்கள் பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பிரச்சினைகள் போன்று தோன்றலாம். ஆனால் நாம் நிலம், நீர், ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் விதத்துடன் இந்தப் பிரச்சினைகளில் பல தொடர்புபட்டுள்ளன.
அதனால்தான் நமக்கு காலநிலை நடவடிக்கை தேவைப்படுகிறது.
காலநிலை மாற்றம் என்றால் என்ன?
பூமியைச் சுற்றி இயற்கையான வாயு அடுக்கு ஒன்று உள்ளது. அது குறிப்பிட்ட அளவு வெப்பத்தைத் தக்கவைத்து, உயிரினங்கள் வாழக்கூடிய அளவிற்கு பூமியை வெப்பமாக வைத்திருக்க உதவுகிறது.
ஆனால் நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை எரிக்கும் போது, வெப்பத்தைத் தக்கவைக்கும் வாயுக்களான கார்பன் டைஒக்சைடு, நைட்ரஸ் ஒக்சைடு மற்றும் மீத்தேன் போன்ற வாயுக்கள் அதிக அளவில் வளிமண்டலத்தில் சேர்கின்றன.
காடுகளை அழித்தல் மற்றும் இயற்கைச் சூழல் தொகுதிகளுக்கு சேதம் ஏற்படுத்துதல் காரணமாக, கார்பன் டை ஒக்சைடை இயற்கையாக உறிஞ்சும் செயல்முறையும் பாதிக்கப்படுகிறது. வளிமண்டலத்தில் அதிகளவு வெப்பம் தங்கும்போது பூமி வெப்பமடைகிறது. இதனால் காலநிலை முறைகளிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன.
இதனால், புவி வெப்பமடைதலைத் தடுக்க முடியாத நிலையை நோக்கி நாம் இன்று நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
காலநிலை மாற்றத்தால்:
- அதிக வெப்பநிலை
- எதிர்பார்க்க முடியாத வகையில் மாறும் மழைப்பொழிவு முறைகள்
- வெள்ளம் மற்றும் மண்சரிவுகள்
- நீண்டகால வறட்சி மற்றும் நீர்ப்பற்றாக்குறை
- அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சூறாவளிகள்
- பயிர்ச்சேதம் மற்றும் உணவுப் பற்றாக்குறை
- கடல் மட்டம் உயருதல்
- காடுகள், ஆறுகள், கடல்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு
- சுகாதார அபாயங்கள் அதிகரித்தல் போன்றவை ஏற்படக்கூடும்.
காலநிலை மாற்றம் என்பது ஒவ்வொரு நாளும் வெப்பம் அதிகரிப்பது மட்டுமல்ல. அது நமது காலநிலை முறைகள் நிலையற்றதாக மாறுவதையும், சில தீவிரமான வானிலை நிகழ்வுகள் அதிகரிப்பதையும் குறிக்கிறது.
காலநிலை மாற்றம் நமது சுகாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது?
காலநிலை நெருக்கடி என்பது வெள்ளம், வறட்சி அல்லது புயல் ஏற்படும் நேரத்தை மட்டும் குறிக்காது. வெப்பநிலை படிப்படியாக அதிகரித்தல், காற்று மற்றும் நீர் மாசுபடுதல், உணவுப் பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றங்கள் ஆகியவை நமது சுகாதாரத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அதிக வெப்பத்திற்கு அடிக்கடி வெளிப்படுவதால் நீரிழப்பு, அதிக சோர்வு, தலைவலி மற்றும் சிறுநீரகங்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். காற்று மாசுபாடு காரணமாக ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்கள் ஏற்படுவதற்கான அல்லது ஏற்கனவே உள்ள நோய்கள் தீவிரமடைவதற்கான அபாயம் உள்ளது. கொசுக்கள் போன்ற நோய்களைப் பரப்பும் உயிரினங்கள் பெருகுவதற்கான இடங்கள் அதிகரிப்பதால், டெங்கு போன்ற நோய்கள் அதிகமான பகுதிகளிலும் நீண்ட காலத்திற்கும் பரவக்கூடும்.
வறட்சி, வெள்ளம் மற்றும் பயிர்ச்சேதம் காரணமாக சத்தான உணவுகளைப் பெற்றுக்கொள்வது கடினமாகலாம். அதேவேளை, காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையும் அதிகரிக்கலாம். சத்தான உணவைப் பெற முடியாத நிலை குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, கற்றல் திறன் மற்றும் நோய்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடும்.
காலநிலை மாற்றம் தொடர்பான அச்சம், வீடு அல்லது வாழ்வாதாரத்தை மீண்டும் மீண்டும் இழத்தல் மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை மனநலத்திலும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரத்தின் மீதான தாக்கம்
காலநிலை நெருக்கடி நமது பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரத்திலும் குறுகிய கால மற்றும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
அதிக வெப்பநிலை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நீர்ப்பற்றாக்குறை, பாதுகாப்பான கழிப்பறைகள் இல்லாமை மற்றும் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றால், பெண் குழந்தைகள் தங்களது மாதவிடாய் சுகாதாரத்தையும் தூய்மையையும் முறையாகப் பேணுவது பெரும் சவாலாக மாறுகிறது.
அதிக வெப்பநிலை கர்ப்பிணிகளுக்கும் கருவுக்கும் அதிகமான சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், பிளாஸ்டிக் மாசுபாட்டின் காரணமாக, நமது இனப்பெருக்கத்துடன் தொடர்புடைய உறுப்புகளில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் உள்ளிட்டவை சென்றடைவதாக உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வெள்ளம், வறட்சி மற்றும் இடம்பெயர்வு காரணமாக மருத்துவமனைகள் அல்லது மருத்துவ நிலையங்களுக்குச் செல்வதில் தடைகள் ஏற்படலாம். இதனால் பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் கர்ப்பகால பராமரிப்பு ஆகியவற்றைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்படலாம். டிட்வா புயலின்போதும் இதுபோன்ற நிலைமையை நாம் அனுபவித்தோம்.
வருமானத்தையும் பள்ளிக் கல்வியையும் இழப்பதால், சில இளம் பருவத்தினர் குறைந்த வயதிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படலாம். இதன் மூலம் தேவையற்ற கர்ப்பம், பாலியல் சுரண்டல் மற்றும் வன்முறை போன்ற அபாயங்கள் அதிகரிக்கக்கூடும்.
காலநிலை நெருக்கடி என்பது வெள்ளம், வறட்சி அல்லது புயல் ஏற்படும் நேரத்தை மட்டும் குறிக்காது. வெப்பநிலை படிப்படியாக அதிகரித்தல், காற்று மற்றும் நீர் மாசுபடுதல், உணவுப் பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றங்கள் ஆகியவை நமது சுகாதாரத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அதிக வெப்பத்திற்கு அடிக்கடி வெளிப்படுவதால் நீரிழப்பு, அதிக சோர்வு, தலைவலி மற்றும் சிறுநீரகங்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். காற்று மாசுபாடு காரணமாக ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்கள் ஏற்படுவதற்கான அல்லது ஏற்கனவே உள்ள நோய்கள் தீவிரமடைவதற்கான அபாயம் உள்ளது. கொசுக்கள் போன்ற நோய்களைப் பரப்பும் உயிரினங்கள் பெருகுவதற்கான இடங்கள் அதிகரிப்பதால், டெங்கு போன்ற நோய்கள் அதிகமான பகுதிகளிலும் நீண்ட காலத்திற்கும் பரவக்கூடும்.
வறட்சி, வெள்ளம் மற்றும் பயிர்ச்சேதம் காரணமாக சத்தான உணவுகளைப் பெற்றுக்கொள்வது கடினமாகலாம். அதேவேளை, காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையும் அதிகரிக்கலாம். சத்தான உணவைப் பெற முடியாத நிலை குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, கற்றல் திறன் மற்றும் நோய்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடும்.
காலநிலை மாற்றம் தொடர்பான அச்சம், வீடு அல்லது வாழ்வாதாரத்தை மீண்டும் மீண்டும் இழத்தல் மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை மனநலத்திலும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரத்தின் மீதான தாக்கம்
காலநிலை நெருக்கடி நமது பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரத்திலும் குறுகிய கால மற்றும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
அதிக வெப்பநிலை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நீர்ப்பற்றாக்குறை, பாதுகாப்பான கழிப்பறைகள் இல்லாமை மற்றும் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றால், பெண் குழந்தைகள் தங்களது மாதவிடாய் சுகாதாரத்தையும் தூய்மையையும் முறையாகப் பேணுவது பெரும் சவாலாக மாறுகிறது.
அதிக வெப்பநிலை கர்ப்பிணிகளுக்கும் கருவுக்கும் அதிகமான சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், பிளாஸ்டிக் மாசுபாட்டின் காரணமாக, நமது இனப்பெருக்கத்துடன் தொடர்புடைய உறுப்புகளில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் உள்ளிட்டவை சென்றடைவதாக உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வெள்ளம், வறட்சி மற்றும் இடம்பெயர்வு காரணமாக மருத்துவமனைகள் அல்லது மருத்துவ நிலையங்களுக்குச் செல்வதில் தடைகள் ஏற்படலாம். இதனால் பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் கர்ப்பகால பராமரிப்பு ஆகியவற்றைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்படலாம். டிட்வா புயலின்போதும் இதுபோன்ற நிலைமையை நாம் அனுபவித்தோம்.
வருமானத்தையும் பள்ளிக் கல்வியையும் இழப்பதால், சில இளம் பருவத்தினர் குறைந்த வயதிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படலாம். இதன் மூலம் தேவையற்ற கர்ப்பம், பாலியல் சுரண்டல் மற்றும் வன்முறை போன்ற அபாயங்கள் அதிகரிக்கக்கூடும்.
எனவே, காலநிலை நடவடிக்கைகள் என்பது மரங்களை நடுதல் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் மட்டுமல்ல. தூய்மையான குடிநீர், சத்தான உணவு, பாதுகாப்பான கழிப்பறைகள், மாதவிடாய் சுகாதார வசதிகள் மற்றும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் அனைவருக்கும் தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதி செய்வதும் அதன் ஒரு பகுதியாகும்.
நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது இன்று ஏற்படும் ஒரு பேரிடரிலிருந்து மட்டுமே நம்மைப் பாதுகாப்பது அல்ல; நமது உடல், ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத் தலைமுறையினரையும் நீண்டகால அடிப்படையில் பாதுகாப்பதாகும்.
இலங்கையின் காலநிலை அவசரநிலையை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம்?
இலங்கையில் வாழும் எங்களுக்கு, காலநிலை அவசரநிலை என்பது தொலைதூரத்தில் உள்ள ஒரு நாட்டில் நடைபெறும் விடயம் அல்ல.
நீண்டகால வறட்சியால் ஒரு கிராமத்திற்குத் தேவையான நீர் இல்லாமல் போகலாம். கடுமையான மழையால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, பாடசாலைகள் மூடப்பட்டு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் சேதமடையலாம். மண்சரிவுகள் காரணமாக குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படலாம்.
மழை எதிர்பார்த்ததற்கு முன்னதாகவோ, தாமதமாகவோ அல்லது ஒரே நேரத்தில் அதிகமாகவோ பெய்தால், விவசாயியின் முழு அறுவடையும் அழிந்துபோகலாம். கடல் மற்றும் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே கணிக்க முடியாதபோது, மீனவர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
2001 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட மர இழப்புகளில் 96% மனித நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. இதற்கான முக்கிய காரணமாக காடுகளை நிரந்தர விவசாய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவது குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக மட்டும் சுமார் 220,000 ஹெக்டேயர் காடுகள் இழக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகள் மற்றும் உட்கட்டமைப்புகளை அமைத்தல், மரம் வெட்டுதல் மற்றும் சுரங்கத் தொழில் போன்ற நடவடிக்கைகளும் இந்த அழிவுக்குப் பங்களித்துள்ளன. இதன்மூலம், இலங்கையில் காடுகள் அழிவது பெரும்பாலும் இயற்கையான காரணங்களால் அல்ல; நாம் நிலத்தைப் பயன்படுத்தும் விதத்தினால் ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்தப் பாதிப்புகள் அனைவரையும் ஒரே விதமாகப் பாதிப்பதில்லை.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஒரு பேரிடருக்குத் தயாராகுதல், பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுதல் அல்லது பேரிடருக்குப் பின்னர் மீண்டும் தங்களது வாழ்க்கையை கட்டியெழுப்புதல் போன்றவற்றிற்குத் தேவையான வளங்கள் குறைவாக இருக்கலாம். சிறுமிகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் கிராமப்புற, கடலோர, தோட்டப் பகுதிகள் அல்லது மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் குழந்தைகள் மேலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.
உதாரணமாக, வெள்ளத்திற்குப் பின்னர் அல்லது இடம்பெயர்ந்து வாழும் சூழ்நிலையில் சிறுமிகளுக்குத் தூய்மையான நீர், தனியுரிமையுடன் கூடிய கழிப்பறைகள் மற்றும் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களைப் பெற்றுக்கொள்வது கடினமாக இருக்கலாம். உணவு சமைத்தல், சுத்தம் செய்தல் மற்றும் பிறரைப் பராமரித்தல் போன்ற பொறுப்புகளும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது அதிகமாகச் சுமத்தப்படலாம்.
அதனால்தான் காலநிலை நடவடிக்கைகள் அனைவருக்கும் நியாயமானதாகவும் சமத்துவமானதாகவும் இருக்க வேண்டும்.
பாரிஸ் ஒப்பந்தம் என்றால் என்ன?
2015ஆம் ஆண்டு உலக நாடுகள் பிரான்சின் பாரிஸ் நகரில் ஒன்றுகூடி, காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கின. இது பாரிஸ் ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது.
இதன் முக்கிய நோக்கம், தொழில்துறை வளர்ச்சிக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, பூமியின் சராசரி வெப்பநிலை உயர்வை 2°C-க்கும் குறைவாக வைத்திருப்பதாகும். முடிந்தவரை அந்த அதிகரிப்பை 1.5°C-க்கு கட்டுப்படுத்துவதற்கும் நாடுகள் முயற்சி செய்ய வேண்டும்.
ஒரு டிகிரி அல்லது இரண்டு டிகிரி என்பது பெரிய மாற்றம் இல்லை என்று தோன்றலாம். ஆனால் இங்கு பேசப்படுவது ஒரு நகரத்தின் அல்லது ஒரு நாளின் வெப்பநிலையைப் பற்றி அல்ல. முழு பூமியின் சராசரி வெப்பநிலையைப் பற்றியே பேசப்படுகிறது.
வெப்பநிலையில் ஏற்படும் சிறிய அதிகரிப்புகூட மழைப்பொழிவு முறைகள், கடல்கள், பனிப்பாறைகள், உணவு உற்பத்தி, சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மனித ஆரோக்கியம் ஆகியவற்றில் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், நாடுகள்:
- பூமியை வெப்பமடையச் செய்யும் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும்.
- ஏற்கனவே ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு தயாராக வேண்டும்.
- காலநிலை அபாயங்களிலிருந்து மக்களையும் சமூகங்களையும் பாதுகாக்க வேண்டும்.
- காலநிலை நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி, அறிவு மற்றும் தொழில்நுட்பம் தேவைப்படும் நாடுகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
- தங்களுடைய தேசிய காலநிலைத் திட்டங்களை சமர்ப்பித்து, அவற்றைத் தொடர்ந்து மேலும் வலுப்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
இலங்கையும் காலநிலை தொடர்பான உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. சில இழப்புகளைத் தடுக்கவோ அல்லது அவற்றுக்குத் தகுந்தவாறு மாற்றியமைத்துக்கொள்ளவோ முடியாது.
மண்சரிவு காரணமாக ஒரு வீடு முழுமையாக அழிந்துபோகலாம். ஒரு விவசாயி மீண்டும் மீண்டும் தனது அறுவடையை இழக்க நேரிடலாம். கடல் மட்டம் உயர்வதால், கடலோர சமூகங்கள் தங்களது நிலங்களை இழக்க நேரிடலாம்.
காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில் அதிக பங்களிப்பைச் செய்த நாடுகளும் நிறுவனங்களும், பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீண்டும் தங்களது வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவு வழங்க வேண்டும். இது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களுக்கான பதிலளிப்பு எனப்படுகிறது.
அதனால், உங்களைப் போன்ற குழந்தைகளுக்கு இவ்வாறு கேட்கும் உரிமை இருக்கிறது:
- இலங்கை வழங்கியுள்ள உறுதிமொழிகள் என்ன?
- அரசாங்கம் அவற்றை நிறைவேற்றுகிறதா?
- காலநிலை நடவடிக்கைகளுக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படுகிறதா?
- கிராமப்புற சமூகங்களின் கருத்துகள் கேட்கப்படுகிறதா?
- வெள்ளம், அதிக வெப்பம் மற்றும் பிற பேரிடர்களை எதிர்கொள்ள பாடசாலைகள் தயார்படுத்தப்படுகின்றனவா?
- காலநிலை தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்போது இளைஞர்கள் உண்மையாகவே ஈடுபடுத்தப்படுகிறார்களா?
பாரிஸ் ஒப்பந்தம் உலக நாடுகள் ஒன்றிணைந்து செல்ல வேண்டிய ஒரு திசையை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், நாடுகள் இன்னும் போதுமான வேகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவில்லை.
உலகின் முக்கியமான சில காலநிலைத் தேவைகளைப் பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிடலாம்.
- வெப்பநிலை அதிகரிப்பை 1.5°C-க்கு மட்டுப்படுத்துதல்
அரசாங்கங்கள் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை இன்னும் வேகமாகக் குறைக்க வேண்டும்.
உலகில் அதிக அளவில் மாசுபாட்டை ஏற்படுத்தும் துறைகளில் புதைபடிவ எரிபொருள் தொழில்துறையும் ஒன்றாகும். உதாரணமாக, சவுதி அராம்கோ (Saudi Aramco), கோல் இந்தியா (Coal India), சீனா எனர்ஜி (China Energy) போன்ற அரசுக்குச் சொந்தமான அல்லது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களை குறிப்பிடலாம். இவை ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான டன் கார்பன் டை ஆக்சைடை வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன.
- நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்து படிப்படியாக விலகுதல்
உலகம் நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களின் மீது கொண்டுள்ள சார்பைக் குறைத்து, சூரிய மற்றும் காற்றாலை போன்ற தூய்மையான ஆற்றல் முறைகளை அதிகரிக்க வேண்டும்.
இந்த மாற்றம் நியாயமான முறையில் நடைபெற வேண்டும். சக்திவாய்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து இலாபம் ஈட்டிக்கொண்டிருக்க, தொழிலாளர்களையும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களையும் மேலும் வறுமைக்குள் தள்ளும் தீர்வுகள் நியாயமானவை அல்ல.
- இயற்கையைப் பாதுகாத்து மீளுருவாக்குதல்
காடுகள், ஈரநிலங்கள், கண்டல் காடுகள், ஆறுகள், கடல்கள் மற்றும் ஆரோக்கியமான மண் ஆகியவை நமது வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை. அவை நீரை வழங்குகின்றன, கார்பனைச் சேமிக்கின்றன, பேரிடர்களின் தாக்கத்தைக் குறைக்கின்றன மற்றும் வனவிலங்குகள் வாழ்வதற்கான இடங்களை வழங்குகின்றன.
2030ஆம் ஆண்டுக்குள் உலகின் நிலப்பரப்பு, உள்நாட்டு நீர்நிலைகள் மற்றும் கடல் பகுதிகளில் குறைந்தது 30% பகுதிகளைப் பாதுகாப்பதும், சேதமடைந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் குறைந்தது 30% பகுதிகளை மீளுருவாக்குவதும் உலகளாவிய பல்லுயிர் பாதுகாப்பு இலக்குகளில் அடங்குகின்றன.
ஆனால், இயற்கையைப் பாதுகாப்பது என்ற பெயரில் அப்பகுதிகளில் வாழும் சமூகங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது நியாயமானதல்ல. எனவே, இத்தகைய தீர்மானங்களை எடுக்கும்போது மக்களின் கருத்துகளைப் பெறுவது முக்கியமாகிறது.
- ஏற்கனவே ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்குத் தயாராகுதல்
காலநிலை மாற்றத்தின் சில தாக்கங்கள் ஏற்கனவே நம்மைச் சுற்றி நிகழ்ந்து வருகின்றன.
அதிக வெப்பம், வெள்ளம், வறட்சி, புயல்கள், மண்சரிவுகள், உணவுப் பற்றாக்குறை மற்றும் சுகாதார அபாயங்களை எதிர்கொள்ள நாடுகள் தயாராக வேண்டும்.
இது காலநிலை மாற்றத்திற்கான தழுவல் (Climate Adaptation) எனப்படுகிறது.
அதற்காக:
- சிறந்த வடிகால் அமைப்புகள்
- முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள்
- காலநிலைப் பேரிடர்களைத் தாங்கக்கூடிய பாடசாலைகள்
- பாதுகாப்பான நீர் ஆதாரங்கள்
- அதிக வெப்பத்தை எதிர்கொள்வதற்கான திட்டங்கள்
- காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ற விவசாய முறைகள்
- பாதுகாப்பான வெளியேற்றப் பாதைகள்
- அனைவரும் அணுகக்கூடிய அவசரகால தங்குமிடங்கள்
- பேரிடர் காலங்களில் தனியுரிமையுடன் கூடிய கழிப்பறைகள், தூய்மையான நீர் மற்றும் மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள்
ஆகியவை அவசியமாகின்றன.
- ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சேதங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல்
சில இழப்புகளைத் தடுக்கவோ அல்லது அவற்றுக்குத் தகுந்தவாறு மாற்றியமைத்துக்கொள்ளவோ முடியாது.
மண்சரிவு காரணமாக ஒரு வீடு முழுமையாக அழிந்துபோகலாம். ஒரு விவசாயி மீண்டும் மீண்டும் தனது அறுவடையை இழக்க நேரிடலாம். கடல் மட்டம் உயர்வதால், கடலோர சமூகங்கள் தங்களது நிலங்களை இழக்க நேரிடலாம்.
காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில் அதிக பங்களிப்பைச் செய்த நாடுகளும் நிறுவனங்களும், பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீண்டும் தங்களது வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவு வழங்க வேண்டும். இது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களுக்கான பதிலளிப்பு எனப்படுகிறது.
- 6. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கருத்துகளுக்குச் செவிசாய்த்தல்
இன்று எடுக்கப்படும் தீர்மானங்களின் விளைவுகளுடன் வாழ வேண்டியது இளம் தலைமுறையினரே. எனவே, உங்களைப் போன்ற குழந்தைகளுக்கு காலநிலைத் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பவும், தீர்வுகளை முன்வைக்கவும், தீர்மானம் எடுக்கும் செயல்முறைகளில் உண்மையாகப் பங்கேற்கவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஒரு விழாவில் குழந்தைகளைப் பாடல் பாடச் செய்வது, நடனமாடச் செய்வது அல்லது பதாகையொன்றை ஏந்தி நிற்கச் செய்வது என்பது அவர்களின் கருத்துகளுக்குச் செவிசாய்ப்பதாகாது.
தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர் அவர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும். அந்தக் கருத்துகளைத் தீர்மானங்களில் உண்மையாகவே உள்ளடக்குவதும் அவசியம்.
காலநிலை மாற்றமும் பிளாஸ்டிக் மாசுபாடும் தொடர்புடையவை
பிளாஸ்டிக் மாசுபாடும் காலநிலை மாற்றமும் ஒரே பிரச்சினை அல்ல. இருப்பினும், அவற்றுக்கிடையே நெருங்கிய தொடர்பு உள்ளது.
பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்கள் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தியே உற்பத்தி செய்யப்படுகின்றன. பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்தல், போக்குவரத்து செய்தல் மற்றும் எரித்தல் போன்ற செயல்முறைகளின்போது பசுமைக்குடில் வாயுக்கள் வெளியிடப்படுகின்றன. வடிகால்கள், ஆறுகள் மற்றும் கடல்களில் சேரும் பிளாஸ்டிக் விலங்குகளுக்கு தீங்கு விளைவிப்பதுடன், இயற்கைச் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் பாதிக்கிறது.
2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை, நாம் இதே முறையில் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்து தொடர்ந்து வீணாக்கிக்கொண்டிருந்தால், 2050ஆம் ஆண்டளவில் கடல்களில் மீன்களை விட அதிக அளவு பிளாஸ்டிக் இருக்கக்கூடும் என எச்சரித்தது.
இதன் பொருள் 2050ஆம் ஆண்டில் மீன்
கள் முற்றிலும் அழிந்துவிடும் என்பதல்ல. கடலில் சேரக்கூடிய மிகப்பெரிய அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து விடுக்கப்பட்ட ஒரு தீவிரமான எச்சரிக்கையாகும்.
இதற்கான தீர்வை, குழந்தைகள் பிளாஸ்டிக் உறிஞ்சுகுழாய்களைப் பயன்படுத்த வேண்டாம் அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய போத்தலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறுவதில் மட்டும் மட்டுப்படுத்த முடியாது.
- தேவையற்ற பிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைத்தல்
- தீங்கு விளைவிக்கும் ஒருமுறைப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல்
- பாதுகாப்பான மீள்பயன்பாடு மற்றும் மீள்நிரப்பல் முறைகளை அறிமுகப்படுத்துதல்
- தாங்கள் உருவாக்கும் கழிவுகளுக்கான உற்பத்தியாளர்களின் பொறுப்பை உறுதி செய்தல்
- ஒவ்வொரு சமூகத்திற்கும் முறையான கழிவு சேகரிப்பு சேவையை வழங்குதல்
- திறந்தவெளியில் கழிவுகளை வீசுவதையும் பிளாஸ்டிக்கை எரிப்பதையும் நிறுத்துதல்
- கழிவுகள் ஆறுகளிலும் கடல்களிலும் சேருவதைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகள் அவசியமாகின்றன.
- குழந்தைகளால் கழிவுகளைக் குறைக்க முடியும். ஆனால் பிளாஸ்டிக் தொழில்துறையை உருவாக்கியது குழந்தைகள் அல்ல. பெரியவர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் தங்களுடைய பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உலகளவில் அதிக அளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களாக கொக்கா-கோலா, நெஸ்லே மற்றும் யூனிலீவர் ஆகிய மூன்று நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் உங்கள் கிராமத்திலும், பாடசாலையிலும், வீட்டிலும் காணப்படுகின்றன. இத்தகைய பிளாஸ்டிக் மாசுபாடு நமது எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.உதாரணமாக, தாய்ப்பாலிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் (மைக்ரோபிளாஸ்டிக்ஸ்) கண்டறியப்பட்டுள்ளன.
மனித–யானை மோதலும் இதனுடன் தொடர்புடையதா?
இலங்கையின் யானைகள் வாழ்வதற்கு ஒன்றோடொன்று தொடர்புடைய வாழ்விடங்கள், நீர், உணவு மற்றும் பாதுகாப்பான பயணப் பாதைகள் அவசியமாகின்றன. அதேபோல், யானைகளின் வாழ்விடங்களுக்கு அருகில் வாழும் மக்களுக்கும் பாதுகாப்பான வீடுகள், விவசாய நிலங்கள், சாலைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் அவசியம்.
காடுகள் அழிக்கப்படும்போது, யானைகளின் பயணப் பாதைகள் தடைப்படும்போது அல்லது பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் அவற்றின் வாழ்விடங்களுக்குள் நுழையும்போது, உணவு மற்றும் நீரைத் தேடி யானைகள் கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் வழியாகச் செல்லக்கூடும். உதாரணமாக, மொரகஹகந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டபோது, மின்னேரியா மற்றும் வசகமுவ பகுதிகளைச் சுற்றி வாழும் யானைகளின் பயணப் பாதைகள் மற்றும் வாழ்விடங்களுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்பட்டதாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வறட்சி, கழிவுகளை முறையற்ற விதத்தில் அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு போன்ற காரணங்களால் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம். இதன் விளைவுகள் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் அச்சுறுத்தலாகவும் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கலாம்.
உதாரணமாக, 2025ஆம் ஆண்டில் மனித நடவடிக்கைகளால் மட்டும் 204 யானைகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மனித–யானை மோதலுக்கு கிராமப்புற மக்களைக் குற்றம் சாட்டுவதன் மூலம் மட்டும் தீர்வைக் காண முடியாது. யானைகளை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு விரட்டுவதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும் முடியாது.
நிலப் பயன்பாடு, காடுகள், விவசாயம், சாலைகள், கழிவுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக பெரியவர்களும் அதிகாரிகளும் சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டும். யானைகளுடன் வாழும் சமூகங்களின் அறிவு, அனுபவங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேவைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும்.
யானைகளைப் பாதுகாப்பதும் மக்களைப் பாதுகாப்பதும் ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு தெரிவுகள் அல்ல. இரு தரப்பினரையும் பாதுகாக்கக்கூடிய தீர்வுகளே நமக்குத் தேவை.
நீங்கள் என்ன செய்ய முடியும்?
நீங்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டியதில்லை. உங்கள் பாடசாலை, வீடு அல்லது சமூகத்துடன் தொடர்புடைய ஒரு விடயத்திலிருந்து தொடங்குங்கள்.
உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கவனியுங்கள்
காலநிலை நடவடிக்கைகள் ஒரு கேள்வியிலிருந்து தொடங்கலாம்:
- நமது குப்பைகள் எங்கே செல்கின்றன?
- நமது வீடுகளுக்கு அருகில் பிளாஸ்டிக் எரிக்கப்படுகிறதா?
- ஏரி, குளம், கால்வாய் அல்லது நீரோடை மாசுபடுத்தப்படுகிறதா?
- நமது பாடசாலையில் போதுமான நிழலும் குடிநீரும் உள்ளதா?
- சுற்றியுள்ள நிலங்கள் அழிக்கப்படும்போது விலங்குகளுக்கு என்ன நடக்கிறது?
- நமது பகுதி வெள்ளத்தில் மூழ்கினால், அதிகமாகப் பாதிக்கப்படுவது யார்?
- அவசரகால தங்குமிடத்தை ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியுமா?
- ஒரு பேரிடரின்போது சிறுமிகள் தங்களது மாதவிடாய் சுகாதாரத்தைப் பாதுகாப்பாக நிர்வகிக்க முடியுமா?
- காலப்போக்கில் வானிலை, நீர், விவசாயம், வனவிலங்குகள் அல்லது கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி பெரியவர்களிடம் கேளுங்கள். நீங்கள் கற்றுக்கொள்வதைப் பதிவு செய்துகொள்ளுங்கள்.
காலநிலை வரைபடம் ஒன்றை உருவாக்குங்கள்
அனுமதியுடனும் பெரியவர்களின் ஆதரவுடனும், உங்கள் பாடசாலையிலோ அல்லது கிராமத்திலோ பின்வரும் இடங்களை ஒரு வரைபடத்தில் குறிக்கலாம்:
- வெள்ளம் ஏற்படும் இடங்கள்
- குப்பைகள் கொட்டப்படும் இடங்கள்
- பிளாஸ்டிக் எரிக்கப்படும் இடங்கள்
- நீர் மாசுபடும் இடங்கள்
- மரங்கள் வெட்டப்படும் இடங்கள்
- அதிக வெப்பம் நிலவும் இடங்கள்
- அடைபட்ட வடிகால்கள்
- வனவிலங்குகள் பயணிக்கும் பாதைகள்
- நீர்ப்பற்றாக்குறை உள்ள இடங்கள்
தேதியைக் குறிப்பிட்டு, பாதுகாப்பான மற்றும் பொருத்தமான சந்தர்ப்பங்களில் புகைப்படங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து நீங்கள்:
- குப்பைகளை எரிப்பதை நிறுத்தலாம்
- பாடசாலை நிகழ்வுகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கலாம்
- ஏற்கனவே உள்ள மரங்களைப் பாதுகாக்கலாம்
- அதிக நிழல் வசதிகளையும் குடிநீர் வசதிகளையும் கோரலாம்
- மழைக்காலத்திற்கு முன்பாக வடிகால்களைச் சரிபார்க்கலாம்
- கழிவுகளைப் பிரித்துச் சேகரிப்பதை முறையாக ஏற்பாடு செய்யலாம்
- முறையாகப் பராமரிக்கப்படும் ஒரு உரமாக்கல் (Compost) திட்டத்தைத் தொடங்கலாம்
- வெள்ளம், அதிக வெப்பம் மற்றும் பிற பேரிடர்களுக்கான பாடசாலைத் திட்டத்தை உருவாக்கலாம்
- மாற்றுத்திறனாளி மாணவர்களாலும் அந்தத் திட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்யலாம்
- பேரிடர் திட்டங்களில் மாதவிடாய் சுகாதாரம், நீர் மற்றும் தனியுரிமை தொடர்பான விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கலாம்.
ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு, அதைத் தொடர்ந்து யார் பராமரிப்பார்கள் என்று கேளுங்கள். யாரும் தண்ணீர் ஊற்றாத ஒரு தோட்டமோ அல்லது யாரும் காலி செய்யாத ஒரு குப்பைத் தொட்டியோ நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்தாது.
கேள்விகளைக் கேளுங்கள் — மீண்டும் மீண்டும் கேளுங்கள்
ஒரு கால்வாயைச் சுத்தம் செய்வதாகவோ, ஒரு காட்டைப் பாதுகாப்பதாகவோ அல்லது கழிவு சேகரிப்பை மேம்படுத்துவதாகவோ ஓர் அதிகாரி உறுதியளித்தால், அடுத்து என்ன நடந்தது என்று கேளுங்கள்.
வகுப்பு நண்பர்களுடன் இணைந்து ஒரு கடிதம் எழுதுங்கள். பாடசாலை மூலம் கலந்துரையாடல் ஒன்றைக் கோருங்கள். சமூகக் கூட்டத்தில் பேசுங்கள். பிரச்சினையையும் உங்களுக்குத் தேவையான தீர்வையும் எடுத்துக்காட்டும் ஒரு கண்காட்சியை உருவாக்குங்கள்.
ஒரு கேள்வியைப் புறக்கணிப்பது சாத்தியமாக இருக்கலாம். ஆனால் தகவலறிந்த, ஒன்றிணைந்த இளைஞர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பும்போது, அதிகாரிகளால் அவற்றைப் புறக்கணிப்பது கடினமாகும்.
பெரியவர்களிடம் நாம் எதைக் கோர வேண்டும்?
பாடசாலையிடம் கோருவோம்
- தூய்மையான குடிநீர், நிழல் மற்றும் நல்ல காற்றோட்டம்
- சுத்தமான, தனியுரிமையுடன் கூடிய மற்றும் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய கழிப்பறைகள்
- குப்பைகளை எரிப்பதை நிறுத்துதல்
- ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல்
- இலங்கையைச் சேர்ந்த உதாரணங்களைப் பயன்படுத்தி காலநிலை மாற்றத்தை கற்பித்தல்
- சுற்றுச்சூழல் தொடர்பான தீர்மானங்களில் மாணவர்களை ஈடுபடுத்துதல்
உள்ளூராட்சி நிறுவனங்களிடம் கோருவோம்
- முறையான மற்றும் அனைவருக்கும் சமமான கழிவு சேகரிப்பு சேவை
- திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டுவதையும் பிளாஸ்டிக்கை எரிப்பதையும் நிறுத்துதல்
- குளங்கள், கால்வாய்கள், ஈரநிலங்கள் மற்றும் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல்
- வடிகால்களைப் பராமரித்து வெள்ளத்திற்குத் தயாராகுதல்
- அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கு முன் சமூகங்களின் கருத்துகளைக் கேட்டறிதல்
- திட்டங்கள், செலவுகள் மற்றும் முன்னேற்றங்களைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துதல்
- புகார்களுக்கு உண்மையான பதில்களை வழங்குதல் — எதுவும் நடைபெறாமல் இருக்கும் மற்றொரு WhatsApp குழுவை மட்டும் உருவாக்காமல் இருத்தல்
அரசாங்கத்திடம் கோருவோம்
- பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை வழங்கியுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுதல்
- தூய்மையான மற்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையில் கிடைக்கும் ஆற்றலுக்கு விரைவாக மாறுதல்
- சிறந்த, பாதுகாப்பான மற்றும் அனைவரும் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து சேவையை உருவாக்குதல்
- காடுகள், ஈரநிலங்கள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகளின் பயணப் பாதைகளைப் பாதுகாத்தல்
- மனித–யானை மோதலுக்கான நியாயமான மற்றும் அறிவியல் அடிப்படையிலான தீர்வுகளை வழங்குதல்
- சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல்
- காலநிலை அபாயங்களைத் தாங்கக்கூடிய பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளை உருவாக்குதல்
- காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்குதல்
- பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாக்கும் பேரிடர் திட்டங்களை உருவாக்குதல்
- அவசரகால தங்குமிடங்களில் நீர், தனியுரிமையுடன் கூடிய கழிப்பறைகள் மற்றும் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களின் வசதிகளை மேம்படுத்துதல்
- காலநிலை தொடர்பான தீர்மானங்களில் இளைஞர்களின் உண்மையான பங்கேற்பை உறுதி செய்தல்
- காலநிலை தொடர்பான செலவுகள், திட்டங்கள் மற்றும் முடிவுகள் குறித்து வெளிப்படையான தகவல்களை மக்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்
யானைகள் இல்லாத யானை நடைப்பயணம்: ஒன்றிணைந்து மேற்கொள்ளும் காலநிலை நடவடிக்கை
யானைகள் இல்லாத யானை நடைப்பயணம் (Elephant-Free Elephant Walk) என்பது இப்பாகமுவாவில் உள்ள குழந்தைகள், பெண்கள், பாடசாலைகள் மற்றும் சமூகங்கள் ஒன்றிணைந்து காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் மனித–யானை மோதல் குறித்து கலந்துரையாடுவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, குழந்தைகளும் சமூகங்களும் பெரிய யானை பொம்மைகள், யானை வடிவில் அலங்கரிக்கப்பட்ட மிதிவண்டிகள், ஆடைகள், கலைப் படைப்புகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு செய்திகளைப் பயன்படுத்துகின்றனர். யானைகளைப் பிடித்து, கட்டுப்படுத்தி அல்லது அவற்றைச் சுரண்டாமல், அவற்றையும் நமது உரையாடலின் ஒரு பகுதியாகக் கொண்டுவருகின்றனர்.
காலநிலை நடவடிக்கைகள் முக்கியமானவையாக இருப்பதுடன், அவற்றை மகிழ்ச்சியுடனும் முன்னெடுக்க முடியும் என்பதை இந்த நடைப்பயணம் நமக்குக் காட்டுகிறது. அறிவியல், கலை, உள்ளூர் அறிவு மற்றும் கூட்டு நடவடிக்கை ஆகியவற்றையும் ஒன்றிணைக்க இது உதவுகிறது.