சம்மதத்தை மதிப்போம்

சம்மதத்தை மதிப்போம்

வயது: 13 வயதிற்கு மேற்பட்டவர்கள்
காலம்: 20 நிமிடங்கள்
தகவல்:சம்மத்தை மத்திப்போம்

இந்தப் பாடத்தில் நாம் எதைப் பற்றி பேசுகிறோம்?

இந்தப் பாடத்தில் சம்மதம் (Consent) என்றால் என்ன, ஒருவர் ஒரு விடயத்திற்கு சம்மதத்தை அளித்துள்ளாரா இல்லையா என்பதை எவ்வாறு புரிந்துகொள்வது, மற்றவர்களின் சம்மதத்தையும் எல்லைகளையும் மதிப்பது ஏன் முக்கியம் என்பவை குறித்து கலந்துரையாடுகிறோம்.

 

  1. உரையாடலைத் தொடங்குவோம் – 2 நிமிடங்கள்

மாணவர்களிடம் கேளுங்கள்:

“உங்களுடைய நண்பர் ஒருவர் உங்கள் தொலைபேசியை எடுத்துப் பயன்படுத்த விரும்பினால், அவர் முதலில் உங்களிடம் கேட்க வேண்டுமா? ஏன்?”

 

2–3 பதில்களைக் கேளுங்கள்.

அடுத்து கேளுங்கள்:

 

“நேற்று உங்கள் தொலைபேசியை எடுத்துக்கொள்ள ‘சரி’ என்று நீங்கள் கூறியிருந்தால், இன்று உங்களிடம் கேட்காமல் அவர் உங்கள் தொலைபேசியை எடுத்துக்கொள்ளலாமா?”

 

இந்த உரையாடலின் மூலம், ஒரு முறை வழங்கிய சம்மதம் என்பது எப்போதும் செல்லுபடியாகும் அனுமதி அல்ல என்ற கருத்தை மாணவர்களிடம் கொண்டு செல்லுங்கள்.

 

  1. “இது சம்மதமா?” – 3 நிமிடங்கள்

 

பின்வரும்  சூழ்நிலைகளை வாசித்து, சம்மதம்இருக்கிறதா இல்லையா என்பதைச் சிந்தித்து பதிலளிக்கவும்.

1.“நான் எனது நண்பரிடம் ‘நான் உன்னைக் கட்டிப்பிடிக்கலாமா?’ என்று கேட்கிறேன். அவர் ‘சரி’ என்று கூறுகிறார்.”

ஆம்.

 

2.“நான் ஒருவரிடம் ‘நான் உன்னை முத்தமிடலாமா?’ என்று கேட்கிறேன். அவர் எந்தப் பதிலும் கூறவில்லை. அவர் அசௌகரியமாக இருப்பது போல் தெரிகிறது.”

இல்லை.

அமைதியாக இருப்பது சம்மதம் என்ற அர்த்தமில்லை.

 

3.“நீ உண்மையாகவே என்னை நேசிக்கிறாய் என்றால், இதைச் செய்” என்று ஒருவர் கூறுகிறார்.

இல்லை.
இது ஒருவரை கட்டாயப்படுத்தல் ஆகும்

4.ஒருவர் முதலில் “சரி” என்று கூறுகிறார். பின்னர், “எனக்கு இப்போது இதைச் செய்ய விருப்பமில்லை” என்று கூறுகிறார்.

அந்த இடத்திலேயே நிறுத்த வேண்டும்.
ஒருவர் எந்த நேரத்திலும் தனது முடிவை மாற்றிக்கொள்ள முடியும்.

 

  1. Bakteens கட்டுரையை வாசிப்போம் – 4 நிமிடங்கள்

 

இப்போது “சம்மதத்தை மதிப்போம்” என்ற கட்டுரையை மாணவர்களுக்குக் காண்பியுங்கள்.

அதை அச்சிட்டு வழங்கலாம் அல்லது திரையில் காண்பிக்கலாம்.

கட்டுரையில் சம்மதம் குறித்து விளக்கப்பட்டுள்ள முக்கியமான விடயங்களை மாணவர்களுடன் இணைந்து பாருங்கள்.

அத்துடன், முன்னர் கலந்துரையாடிய சூழ்நிலைகளை மீண்டும் நினைவுபடுத்தி, பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்:

 

  • அமைதியாக இருப்பது = “சரி” என்று கூறுவதா?
  • பயமுறுத்தி அல்லது அழுத்தம் கொடுத்து “சரி” என்று கூறச் செய்தால் = அது உண்மையான சம்மதமா?
  • ஒருமுறை “சரி” என்று கூறினால் = அது எல்லா நேரங்களிலும் “சரி” என்பதைக் குறிக்குமா?

மாணவர்கள் தங்களுடைய பதில்களை வழங்குவதற்கு வாய்ப்பளிக்கவும்.

 

பின்னர் சுருக்கமாக நினைவூட்டுங்கள்:

  • ஒப்புதல் தெளிவாக இருக்க வேண்டும்.

 

  • ஒப்புதல் ஒருவரின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.

 

  • பயமுறுத்தி, அழுத்தம் கொடுத்து அல்லது கட்டாயப்படுத்தி ஒப்புதலைப் பெற முடியாது.

 

  • ஒருவர் எந்த நேரத்திலும் தனது முடிவை மாற்றிக்கொள்ள முடியும்.

 4.இப்போது வீடியோவைப் பார்ப்போம் – 5 நிமிடங்கள்

கட்டுரையில் உள்ள வீடியோவை மாணவர்களுக்குக் காண்பிக்கவும்.

வீடியோவைத் தொடங்குவதற்கு முன் கூறவும்:

“வீடியோவைப் பார்க்கும்போது, நாம் இப்போது வாசித்தும் கலந்துரையாடியும் கொண்ட விடயங்களில் ஏதேனும் ஒன்று வீடியோவிலும் இடம்பெறுகிறதா என்பதை கவனியுங்கள்.”

வீடியோ முடிந்ததும் கேட்கவும்:

“வீடியோவில் உங்களுக்கு மிகவும் நினைவில் நின்ற விடயம் என்ன?”

மாணவர்களிடமிருந்து 2–3 பதில்களைப் பெறவும்.

 

5. இப்போது  வினாக்களை செய்வோம் – 4 நிமிடங்கள்

Bakteens கட்டுரையின் இறுதியில் உள்ள வினாக்களை மாணவர்கள் செய்யுமாறு வழங்கவும்.

Quiz வினாவை ஒரு பரீட்சையாக நடத்த வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, மாணவர்கள் அனைவரும் இணைந்து வகுப்பாகவும் செய்யலாம்.

ஒவ்வொரு கேள்விக்குப் பின்னரும்:

“நீங்கள் ஏன் அந்தப் பதிலைத் தேர்ந்தெடுத்தீர்கள்?”

என்று ஒன்று அல்லது இரண்டு மாணவர்களிடம் கேட்கவும்.

 

இறுதிச் செய்தி – 2 நிமிடங்கள்

பாடத்தின் முடிவில் மாணவர்களிடம் கேட்கவும்:

“இன்றைய பாடத்திலிருந்து நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும் என்றால், அது என்ன?”

மாணவர்களிடமிருந்து சில பதில்களைப் பெறவும். பின்னர், பின்வரும் செய்தியுடன் பாடத்தை நிறைவு செய்யவும்:

“எமது உடலைப் பற்றிய தீர்மானங்களை எடுக்கும் உரிமை நம் அனைவருக்கும் உள்ளது. எனவே, எமது விருப்பத்தைத் தெரிவிப்பதையும், மற்றவரின் விருப்பத்தைக் கேட்பதையும், அந்த விருப்பத்திற்கு மதிப்பளிப்பதையும் நாம் கற்றுக்கொள்வோம்.”

ஆசிரியர்களுக்கான சிறிய நினைவூட்டல்

இந்தப் பாடத்தில், கட்டுரையை மாணவர்கள் வாசிக்கும் ஒரு நீண்ட பாடமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. கட்டுரையை கலந்துரையாடலுக்கு உதவும் ஒரு கருவியாக பயன்படுத்தவும்.

கேள்வி → மாணவர்களின் கருத்துகள் → கட்டுரையிலிருந்து தகவல்கள் → வீடியோ → கலந்துரையாடல் → வினாக்கள்

இந்த முறையில் பாடத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, மாணவர்கள் தகவல்களை வெறுமனே கேட்டு இருப்பதற்குப் பதிலாக, தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து, கேள்விகளைக் கேட்டு, பாடத்தில் செயற்பாட்டுடன் ஈடுபட முடியும்.

 

This resource has been developed based on the Age-Appropriate Sexuality Education, Communication Guideline for Sri Lanka.

 

Key Concept 6: Skills for Sexual Well-Being [read more] Age-Appropriate Sexuality Education, Communication Guideline for Sri Lanka.pdf